நப்தாலி பென்னட் 
உலகம்

விமானத்தில் உடன் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

மாலை மலர்

டெல் அவிவ் :

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தூதரக உறவு இயல்பாக்கப்பட்ட பின்னர் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு அவர் தனது பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் இஸ்ரேல் திரும்பினார்.

இந்த நிலையில் விமானத்தில் பிரதமர் நப்தாலி பென்னட்டுடன் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி நப்தாலி பென்னட் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.