அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதற்கு முன்னதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து ஆப்ரஹாம் லிங்கன் என்ற கடற்படை போர்க்கப்பல் புறப்பட்டது. அமெரிக்காவின் போர்க்கப்பலை பொறுத்தவரை, வீரர்கள் 6 மாதத்திற்குள் கரை திரும்புவார்கள். ஆனால், இந்த முறை சுமார் ஒரு வருடத்தை நெருங்கும் நிலையில் சொந்த நாடு திரும்பவில்லை. அவர்கள் மனதளவில் சோர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில அமெரிக்காவின் ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பல், மேலும் இரண்டு கப்பல்களுடன் தாய்லாந்தில் உள்ள லேம் சாபாங்கில் (Laem Chabang) என்ற இடத்தில் நங்கூரமிடவுள்ளதாக தெரிகிறது.
இதன் அருகில்தான் பட்டாயா என்ற ரெசார்ட் சிட்டி உள்ளது. இது கடற்கரை உல்லாச விடுதி நகரமாகும். சுமார் 5 ஆயிரம் வீரர்கள் இந்த நகரில் உள்ள முக்கியமான ரெசார்ட்களில் தங்கி ஓய்வு எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
வீரர்கள் நீண்ட நாட்கள் கடலிலேயே இருந்ததால் சோர்வை போக்க மதுபானம், கேளிக்கை, பொழுதுபோக்கு போன்றவற்றில் ஈடுபட்டு நேரத்தை செலவழிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாலியல் தொழில் அதிகமாக நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், தற்போது இருந்தே சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் பாலியல் தொழிலாளர்களை கைது செய்து வருகின்றனர். தற்போது வரை சந்தேகத்திற்குரிய வகையில் 40 முதல் 50 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொழிலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம் என்று பட்டாயா காவல் துறைத் தலைவர் அனெக் ஸ்ரதோங்யூ கூறினார். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம், ஆனால் இது கடினமானது என்றார்.
அதிகாரிகளுக்கு தெரியாமலேயே பாலியல் தொழிலாளர்கள் பொது இடங்களில் வாடிக்கையாளர் ஆகக்கூடியவர்களை அணுக முடியும் என்று எச்சரித்தார்.
அமெரிக்க வீரர்கள் ஒருநாளைக்கு 30 முதல் 91 டாலர் வரை செலவழிக்க வாய்ப்புள்ளது. இது குறுகிய காலத்தில் பட்டாயா நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.