உலகம்

குழந்தைகளுக்கு ‘நாய்’ மற்றும் ‘பன்றி’ என பெயர் சூட்டிய பெற்றோர்கள் - இதுதான் காரணம்

குழந்தைகள் பாதுகாப்பாக வளர்ந்து, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர்.

சீனாவில் பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளை தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, அவர்களின் பெயருக்கு பின்னால் நாய் மற்றும் பன்றி போன்ற புனைப்பெயர்களை சூட்டியதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண்டைய சீனாவில், மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் பொதுமக்களின் ஆயுட்காலம் குறைந்து காணப்பட்டது.

இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நோய் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க, சில பாரம்பரிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றினர்.

புனைப்பெயர்கள்

அதன்படி அவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு 'நாய்' மற்றும் 'பன்றி' போன்ற புனைப் பெயர்களை சூட்டி வந்தனர்.

இந்த நம்பிக்கைகள், தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வளர்ந்து, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற நம்பிக்கையை பிரதிபலித்ததாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெயர் அர்த்தங்கள்

இன்றைய சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர்களை அவற்றின் அர்த்தங்கள், குடும்பத் தொடர்புகள் அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வைக்கின்றனர்.

ஆனால் முந்தைய தலைமுறையினர் சில சமயங்களில், பாதுகாப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும் பெயர்களையே நம்பி, அதனடிப்படையில் சூட்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கலாச்சாரம்

இந்த எளிமையான புனைப்பெயர்கள், பெற்றோர்களின் மனமார்ந்த விருப்பங்களை கொண்டிருந்தன என்றும், அவை சீனாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்டதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வகையான புனைப்பெயர்கள், முறையான பெயர்களை போலல்லாமல் பெரும்பாலும் வேண்டுமென்றே சாதாரணமானவையாகவும், விரும்பத்தகாதவையாகவும் இருந்ததாகவும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது.

தீய சக்திகள்

ஒரு குழந்தைக்கு எளிமையான பெயரை சூட்டுவது, அவர்களை தீய சக்திகளின் மீதான ஈர்ப்பைக் குறைத்து, துரதிர்ஷ்டத்தின் அபாயத்தையும் குறைக்கும் என்று பெற்றோர்கள் நம்பி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT