பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாத நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 வீரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு பெஷாவர் நகரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாதுகாப்புச் சோதனைச் சாவடியை தாக்கியுள்ளனர்.
துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் மூலம் சோதனைச் சாவடியை சூழ்ந்துகொண்டு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் அங்கிருந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு, சோதனைச் சாவடியில் இருந்த 8 வீரர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட வீரர்கள் அனைவரும் தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தங்களால் கடத்தப்பட்ட 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்ட வீரர்களை மீட்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது.