உலகம்

சவுதிக்கு விரைந்த பாகிஸ்தான் ராணுவம்... தீவிரமடையும் ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதல்

ஏமனில் உள்ள பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியாவுடன் இணைந்து தாக்குதல் நடத்துவதற்கு தனது ராணுவ படையை பாகிஸ்தான் இன்று அனுப்பியுள்ளது.

ஏமன் நாட்டில் உள்ள முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போரில் ஏமன் அரசாங்கத்திற்கு சவுதி அரேபியா தாக்குதல் நடத்தி வரும் சூழலில், சவுதியின் முக்கிய துறைமுக நகரங்கள் மீதும், விமான நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று சவுதி அரேபியாவுடன், துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற நாடுகள் ராணுவ உதவி அளிக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத்தில் மூன்று நாடுகளின் தலைவர்களும் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில், சவுதிக்கு ஆதரவாக தங்கள் ராணுவ படைகளை அனுப்புவதற்கு, தங்களது நாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக துருக்கி தெரிவித்தது.

இந்த நிலையில் ஹவுதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு, பாகிஸ்தான் தனது ராணுவ படைகளை இன்று சவுதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்த உள்ள நிலையில், விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT