விபத்து  
உலகம்

POK-இல் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்ததில் 21 வீரர்கள் பலி - விபத்தா? தாக்குதலா?

போராட்டக்காரர்களால் ஹெலிகாப்டர் தாக்கப்பட்டிருக்கலாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் அருகில் பாகிஸ்தான் விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது.

முசாபராபாத் அருகே உள்ள ராணுவ ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் டேக்-ஆஃப் ஆகும்போது டெக்னிக்கல் கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளது.

இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 21 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து, வீரர்களின் உடல்களை மீட்டனர்.

போராட்டம்

அரசில் காஷ்மீர் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் 12 பதவிகளை நீக்க மறுத்த நீதிமன்றத்தை எதிர்த்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பு சார்பில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது

போராட்டக்காரர்களால் ஹெலிகாப்டர் தாக்கப்பட்டிருக்கலாம் எனச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளைப் பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விபத்திற்கும் அங்கு நடக்கும் உள்நாட்டுப் போராட்டங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்கத் தொழில்நுட்பக் கோளாறால் நேரிட்ட விபத்து என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.