உலகம்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு

உடல் நலம் குன்றிய நிலையில் சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரது மைத்துனர் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி. இவர் ஜமாத்-உத்-தவா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஜமாத்-உத்-தவா தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு நிதிமன்றம் ஹபீஸ் அப்துல் ரகுமான் மக்கிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. அப்துல் ரகுமான் மக்கி பாகிஸ்தான் சித்தாந்தத்திற்கு ஆதரவாளர் என பாகிஸ்தான் முதாஹிதா முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

ஐ.நா. 2023-ம் அவரை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது. சொத்துகள் முடக்கம், பயணத் தடை ஆகிய தடைகளுக்கு உள்ளானார்.