உலகம்

ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு உதவியதை ஒப்புக்கொண்டது சீனா

சீன நிறுவனம் தயாரித்த போர் விமானங்களை இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தியது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் ராணுவ மோதல் நடந்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு சீனா உதவியதாக அப்போதே தகவல் வெளியானது.

இதை தற்போது சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது. சீனாவின் விமான தொழில்துறை கழகத்தை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் அந்த நாட்டு அரசு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில்,

களத்தில் வழங்கப்படும் ஆதரவை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பமும். எங்கள் தளவாடங்கள் உண்மையிலேயே அதன் முழுமையான போர்த்திறனில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணமுமே எங்கள் குழுவை உந்தித்தள்ளியது' என்றார்.

சீன நிறுவனம் தயாரித்த போர் விமானங்களை இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதன் திறன்மிக்க செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்ததாக அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.