உலகம்

Oman: வெள்ளத்தில் சிக்கிய 2 இந்தியர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பாகிஸ்தான் இளைஞர்! - Video

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த மற்றவர்கள் தயங்கிய நிலையில், 25 வயதான ஷேஷாத் கான் என்ற பாகிஸ்தான் இளைஞர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் குதித்துள்ளார்.

மாலை மலர்

ஓமனின் நாட்டில் அதீத மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 24, பார்கா பகுதியில் 2 இந்தியர்கள் சென்ற கார் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த மற்றவர்கள் தயங்கிய நிலையில், 25 வயதான ஷேஷாத் கான் என்ற பாகிஸ்தான் இளைஞர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் குதித்துள்ளார்.

தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த காரின் மேல் ஏறி கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்த இரண்டு இந்தியர்களையும் பத்திரமாக மீட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து பின்னர் பேசிய ஷேஷாத், "அந்த நேரத்தில் நான் அவர்களின் மதம் அல்லது தேசத்தைப் பார்க்கவில்லை. மனித உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாக இருந்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.