உலகம்

Nvidia நிறுவனத்திற்கு மீண்டும் திரும்பிய ஜென்சன் ஹுவாங்: அடையாளமாக இருந்த 'லெதர் ஜாக்கெட்டை' கைவிட்டது ஏன்?

ஹுவாங் தலைமையகம் திரும்பியபோது ஊழியர்கள் வரவேற்றனர், நன்றி கூறி மன்னிப்பு கேட்டு சிறப்பாக செயல்படுவேன் என்றார்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

ஆனால், பல ஆண்டுகளாகத் தனது தனித்துவ அடையாளமாக அணிந்து வந்த கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டை இம்முறை அவர் தவிர்த்திருப்பது தொழில்நுட்ப மற்றும் ஃபேஷன் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

பதவி விலகலும், மீண்டும் வருகையும்

நிறுவன ஊழியர்கள் மற்றும் சீன உளவாளி என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, நவம்பர் 12-ம் தேதி ஜென்சன் ஹுவாங் தனது CEO பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தலைமைத்துவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், என்விடியா நிர்வாகக் குழுவின் ஒருமனதான முடிவின்படி, நவம்பர் 23-ம் தேதி திங்கட்கிழமை அவர் மீண்டும் நிறுவனத்தின் தலைவர், CEO மற்றும் இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

லெதர் ஜாக்கெட்டிற்கு பதில் 'நேவி ப்ளூ' உடை

ஸ்டீவ் ஜாப்ஸின் கருப்பு டர்டில்நெக் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சாம்பல் நிற டி-ஷர்ட் போல, 63 வயதான ஜென்சன் ஹுவாங்கிற்கு கருப்பு நிற லெதர் ஜாக்கெட் மிகப்பெரிய அடையாளமாக இருந்தது.

ஆனால், திங்கட்கிழமை அமெரிக்காவின் சான்டா கிளாராவில் உள்ள என்விடியா தலைமையகத்திற்குத் திரும்பியபோது, அவர் லெதர் ஜாக்கெட்டிற்குப் பதிலாக மிகவும் எளிமையான நேவி ப்ளூ நிற டியோர் ஜிப் வைத்த காட்டன் சட்டை, கருப்பு பேண்ட் மற்றும் ஸ்னீக்கர்ஸ் அணிந்திருந்தார்.

உடை மாற்றத்திற்கான காரணம் என்ன?

சமீபத்திய சர்ச்சைகளுக்குப் பிறகு, ஹுவாங்கின் அடையாளமாக இருந்த லெதர் ஜாக்கெட்டை இணையவாசிகள் 'நடுத்தர வயது நெருக்கடியின் வெளிப்பாடு' எனக் கேலி செய்யத் தொடங்கியிருந்தனர். அந்தச் சர்ச்சையான பிம்பத்திலிருந்து விலகி, ஒரு புதிய தொடக்கத்தைக் காட்டவே அவர் இந்த உடை மாற்றத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என ஃபேஷன் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து' மற்றவர்களின் கருத்துகளைக் கேட்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் மனநிலையைப் பிரதிபலிக்கும் மென்மையான உடை' எனவும் 'தனது தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னைத் திருத்திக்கொள்ளும் மீட்பு உடை' என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவின் சியோல் நகருக்குச் சென்றபோதும் ஹுவாங் இதே நேவி ப்ளூ டியோர் உடையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹுவாங்

தலைமையகத்திற்குத் திரும்பிய ஜென்சன் ஹுவாங்கை ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பேசிய அவர், தனக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்ததற்காக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தச் சூழ்நிலைக்கு ஆளாக்கியதற்காக மன்னிப்பும் கோரினார்.

மேலும், இந்த இரண்டாவது வாய்ப்பில் ஒரு சிறந்த CEO-வாகச் செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

டஜன் கணக்கான லெதர் ஜாக்கெட்டுகளை வைத்திருப்பதாக முன்பு கூறியிருந்த ஹுவாங்கின் இந்த திடீர் மாற்றம், ஒருநாள் முடிவா அல்லது நிரந்தர மாற்றமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT