2026-ம் ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம் உள்பட 6 முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று தொடங்கி தினமும் ஒரு துறைக்கு வரும் 12ம் தேதி வரை பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.
அந்தவகையில், இன்று முதற்கட்டமாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகளின் பெயர், ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தில் உள்ள நோபல் சபையால் இது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிக்கதிர்களை கொண்டு நரம்பு மண்டலச் செல்கள், செயல்பாடுகளை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்புக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறையில் இதுவரை 232 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.