2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருமான நவநீதம் நவி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய அமைதியை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட வாழ்நாள் முயற்சிகளுக்காக இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ 2025-ல் இப்பரிசை வென்றார்.
நோபல் பரிசுடன் 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் $1.2 மில்லியன் டாலர்) ரொக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத் துறைகளுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார துறைக்கான அறிவிப்புடன், திங்கள்கிழமை அறிவிப்புகள் நிறைவடையும்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டின் அமைதி நோபல் பரிசுக்குத் தான் தகுதியானவர் என்று உரிமை கோரி பரப்புரை செய்து வந்த நிலையில், நோபல் கமிட்டி நவி பிள்ளையைத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.