அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அந்த சந்திப்பின்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான உரையாடல் குறித்து டிரம்ப் கூறியதாவது:-
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு டிரம்ப் பெருங்கடல்எனப் பெயர் மாற்றுவது குறித்து நான் பரிசீலித்தேன். பெயர் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கூகுள் மேப்சை தொடர்பு கொண்டேன். இதுதொடர்பாக சுந்தர் பிச்சையிடம் பேசினேன்.
ஆனால், அந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். பெருங்கடல்கள் வேறுபட்டவை. அவை பல நாடுகளை உள்ளடக்கியவை ஆகும். எனவே தயவுசெய்து எங்களை அப்படிச் செய்யச் சொல்லாதீர்கள் என்று சுந்தர் பிச்சை கூறினார்.
இதனால் அந்த யோசனையை கைவிட்டுவிட்டேன். எனக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் என 2 பெருங்கடல்களை மட்டுமே பிடிக்கும்.
இந்த இரண்டை தவிர வேறு எந்தப் பெருங்கடலுக்கும் டிரம்ப் அல்லது அமெரிக்காவின் பெயரைச் சூட்ட நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.