மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் டாசோ அமைந்துள்ளது.
இங்கு கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ராணுவ வீரர்கள் மீது கடந்த 15-ந்தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
ராணுவ வீரர்களும் பதிலுக்கு தாக்கினர். அப்போது மோதலுக்கிடையில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து நைஜர் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். நைஜரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.