உலகம்

பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பாண்டா கரடியின் மலத்தில் ‘மியூகோர் மெலனோலூகாஸ்’ என்ற புதிய பூஞ்சை இனத்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.

காட்டில் உயிர் வாழ்ந்து வரும் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான பூஞ்சை ஒன்று வளர்ந்திருந்ததை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

‘மியூகோர் மெலனோலூகாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த பூஞ்சை, பொதுவாக மண் மற்றும் மக்கும் கரிம பொருட்களில் காணப்படும் பூஞ்சை இனத்தை சேர்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாண்டா கரடியின் மலத்தில் வளரப்பட்ட பூஞ்சை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பகுப்பாய்வு "கரண்ட் மைக்ரோபயலாஜி" என்ற இதழில் வெளியிடப்பட்டது.

அந்த ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான உயிரினத்தை பிரித்தெடுத்து அதற்கு ‘மியூகோர் மெலனோலூகஸ்’ என்று பெயரிட்டனர்.

இந்த மியூகோர் என்ற பூஞ்சை, பொதுவாக இறந்த கரிம பொருட்களான சாணம் மற்றும் மண் ஆகியவற்றில் காணப்படுவதாக உள்ளது.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் அதன் மரபணுவை ஆய்வு செய்தபோது, அந்த பூஞ்சை எந்த இனத்திற்கும் தொடர்பில்லாமல் ஒரு புதுவகையான இனமாக இருந்தது கண்டறியப்பட்டது.

டி.என்.ஏ பகுப்பாய்வு

இந்த பகுப்பாய்வில், ஆராய்ச்சியாளர்கள் ரைபோசோமில் உள்ள டி.என்.ஏ-வின் இரண்டு பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பூஞ்சையானது, ‘மியூகோர் சாட்டர்னினஸ்’ என்ற இனத்துடன் நெருங்கிய தொடர்புடையது கண்டறியப்பட்டது.

இருந்தபோதிலும் இந்த இரண்டு பூஞ்சைகளுக்கும் பல முக்கியமான உடல் வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி, வித்துக்களை உருவாக்கும் உடல் பாகங்களுக்குள் காணப்படும் கொலுமெல்லாக்கள் சிறியதாக இருந்தது.

மறுபுறம், அதன் ஸ்போராஞ்சியோஸ்போர்கள், எம். சாட்டர்னினஸின் ஸ்போராஞ்சியோஸ்போர்களை விட பெரியதாக இருந்தன.

மேலும் சில பூஞ்சைகளில் காணப்படும் சிறப்பு இனப்பெருக்க அமைப்புகளான சைகோஸ்போர்கள் காணப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

மரபணு ஆய்வு

இந்த மரபணு ஆய்வின் முடிவில், புறத்தோற்ற வேறுபாடுகள் இந்த புதிய பூஞ்சையை ஒரு தனி இனமாக வகைப்படுத்தின.

இந்த பூஞ்சைகள் எந்தவொரு நன்மை அல்லது தீங்கு விளைவிக்கும் தன்மையையோ பெற்றிருக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

SCROLL FOR NEXT