பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் நேபாளம் பிரதமர் பலேந்திர ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.22) இந்தியா வருகிறார்.
நேபாளின் இளம் பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
ஞாயிறு இந்தியா வரும் அவர், திங்கள்கிழமையன்று பிரதமர் மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இந்த வருகையானது இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் உயர்மட்டப் பரிமாற்றங்களின் மரபைத் தொடர்வதுடன், தனது ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையின் கீழ் நேபாளத்துடனான உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.