நாசா கடந்த நவம்பர் 2004-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பிய 1.5 டன் எடை கொண்ட தொலைநோக்கி இன்று சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்கள் ஏதாவது ஒன்றின் மீது விழுவதற்கு சாத்தியமுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாசா விஞ்ஞானிகள், விண்வெளியில் காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்ய கடந்த 2004-ம் ஆண்டு 1.5 டன் எடை கொண்ட விண்வெளி தொலைநோக்கியை நீல் கெஹ்ரல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகத்தில் இருந்து அனுப்பினர்.
இதையடுத்து தற்போது சுமார் 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், தொலைநோக்கியின் சில பாகங்கள் பாதிப்புக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து சேதமடைந்த தொலைநோக்கியின் பாகங்கள், இன்று இந்திய நிலப்பரப்பின் மீது விழும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொலைநோக்கி பூமியின் மீது விழுவதை தடுக்க, நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழையும் பகுதி 20.6 டிகிரி வடக்கு மற்றும் 20.6 டிகிரி தெற்கு அட்சரேகைக்கு இடையில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தென்னிந்தியாவின் சில பகுதிகளான மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, புவனேஸ்வர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்கள் மீது விழும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வானியற்பியலாளர் பிராட் டக்கர் கூறுகையில், “பூமியின் 70 சதவீதம் கடலாகவும், 30 சதவீதமாகவும் இருப்பதால், தொலைநோக்கியின் சிதறல்களானது நிலத்தில் விழுவதற்கே அதிக வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் பொருட்களை கண்காணிக்க, இந்தியா தனக்கென சொந்த உள்கட்டமைப்பை கொண்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இஸ்ரோவின் பல்பொருள் கண்காணிப்பு ரேடார் (MOTR), வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு முந்தைய இறுதி சில சுற்றுப்பாதைகளின் போது, ராக்கெட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட விண்வெளி பொருட்களை கண்காணிக்கிறது.
இருப்பினும், பூமியில் விழவுள்ள தொலைநோக்கியின் சிதறல்களை இஸ்ரோ கண்காணித்து வருகிறதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பூமியில் விழவுள்ள நீல் கெஹ்ரல்ஸ் தொலைநோக்கி பெரும்பாலும் கடலில் தான் தரையிறங்கும் என்று சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.