துப்பாக்கி சூடு 
உலகம்

பராகுவே துப்பாக்கிச் சூடு: பிரபல கால்பந்து வீரர் இவான் டராஸின் மனைவி பலியான பரிதாபம்

பராகுவே இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். அதன்பின் அங்கிருந்து தப்பியோடினார். இந்த தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பராகுவே கால்பந்து வீரர் இவான் டாரஸின் மனைவி கிறிஸ்டினா விட்டா அரண்தாவும் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கிறிஸ்டினா இசைக் கச்சேரி அரங்கின் விஐபி பகுதியில் இருந்தபோது, துப்பாக்கிச் சூடு தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இவரை, அவரது கணவர் இவான் மற்றும் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கிறிஸ்டினா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.