இங்கிலாந்து கடற்படையில் ரஷிய எண்ணெய்களை ஏற்றி வரும், தடை செய்யப்பட்ட கப்பல் போக்குவரத்தை இங்கிலாந்து ராணுவம் கண்காணித்து வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்னதாக, ரஷியாவின் நிழல் கப்பலை பறிமுதல் செய்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலீஷ் கால்வாய் அருகே இங்கிலாந்தின் படகு மீது ரஷியாவின் போர்க்கப்பல் வார்னிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் கடற்பகுதிக்கு அப்பால் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.