உலகம்

ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்: ஈரானுடன் அனைத்து வர்த்தகமும் நிறுத்தம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தது.

பதிலடி

இதற்கு பதிலடியாக கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

தற்போது இருதரப்பினரும் மறைமுகமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள தால் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

இதற்கிடையே ஈரானில் இருந்து 2 ஏவுகணைகளை ஏவப்பட்டதாகவும் அதில் ஒரு ஏவுகணை தங்களின் கடல் எல்லைக்குள் விழுந்த தாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்தது.

கடல் போக்குவரத்தை குறி வைத்து தாக்குதல் நடத் தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குற்றம் சாட்டி யது. இதையடுத்து மக்களுக்கு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரிக்கை விடுத்தது.

எச்சரிக்கைகள்

அதில் ஐக்கிய அரபு எமிரேட்சின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டின் மீது ஏவுகணை அச்சுறுத்தலைக் கண்டறிந்து உள்ளன.

எனவே மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் தகவல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வர்த்தகமும் நிறுத்தம்

இந்தநிலையில் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் கூறும்போது, பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குலைக்கும் வகையில் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஈரானுடனான அனைத்து வர்த்தகம், வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடைசியாக கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மறுப்பு

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சை நோக்கி எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் ஈரான் தெரிவித்தது.

நல்ல அண்டை உறவுமுறை என்ற கொள்கையின்படி, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க் கப்பட வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.