மனித வாழ்வாதாரத்திற்கு முக்கியமான கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குவைத் குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானில் உள்ள உயர்ந்த பாலம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாலத்தின் ஒருபகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் குவைத்தில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், தாக்குதலால் அடைந்த சேதம் குறித்து குவைத் விரிவான தகவல் ஏதும் வெளியிடவில்லை.
வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் நாட்டிற்கு வளைகுடா கடலில் இருந்து கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகறது. 90 சதவீதம் குடிநீர் இதன்மூலம்தான் கிடைக்கிறது. இந்த போரில் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையம் முக்கிய இலக்காக பார்க்கப்படுகிறது.
குவைத் நேரப்படி இன்று காலை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியிருந்தது. அதன்பின் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.