மலேசியாவின் இன்று (ஏப்ரல் 19) அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சுமார் 1000 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
சபா (Sabah) மாநிலத்தில் உள்ள கம்பங் கடல் மட்டத்திற்கு மேல் மரத்தூண்களால் கட்டப்பட்ட வீடுகள் அடங்கிய பஹாகா கிராமத்தில் அதிகாலை சுமார் 1:32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
குறுகலான இடைவெளியில் மரத்தால் கட்டப்பட்ட வீடுகள் என்பதால், தீ கட்டுக்கடங்காமல் பரவியது.
தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் செல்ல முடியாதபடி சாலைகள் மிகவும் குறுகலாக இருந்தன.
சுமார் 300 சதுர அடி பரப்பளவு கொண்ட 1000 சிறிய வீடுகள் முற்றிலும் அழிந்தன.
இதுவரை சுமார் 9000 பேர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் சந்தக்கான் பகுதியில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை
பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் இந்தப் பகுதியில், இந்தத் தீ விபத்து அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்துள்ளது.