உலகம்

சீன பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 21 பேர் பலி - 61 பேர் படுகாயம்

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரின் லியுயாங் பகுதியில் பட்டாசு உற்பத்தி அமைந்துள்ளது.

நேற்று மாலை 4:43 மணியளவில் அங்கு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதன் தாக்கம் 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 500க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் வெடிமருந்து கிடங்குகள் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக தொழிற்சாலையின் நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT