உலகம்

இன்னும் பல தாக்குதல்கள் வருகிறது.. ஈரானின் மிக உயரமான பாலம் மீதான தாக்குதல் வீடியோவை வெளியிட்ட டிரம்ப்

136 மீட்டர் உயரமுள்ள இது, மத்திய கிழக்கின் ஒரு "பொறியியல் அதிசயம்" என்று வர்ணிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கிலேயே மிக உயரமான பாலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜ் நகரில்அமைந்துள்ளது.

அண்மையில் கட்டப்பட்ட இந்த பாலம் தலைநகர் தெஹ்ரானை மேற்கு நகரமான கராஜுடன் இணைக்கிறது.

136 மீட்டர் உயரமுள்ள இது, மத்திய கிழக்கின் ஒரு "பொறியியல் அதிசயம்" என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்த பாலம் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

"அமெரிக்க-சியோனிச எதிரிகள் கராஜில் உள்ள பி1 பாலத்தைத் தாக்கினர்" என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி அறிவித்தது.

தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும் 95 பேர் காயமடைந்ததாகவும் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தாக்குதலின் காட்சிகளை பதிவிட்டு, "ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துவிட்டது.

அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. இன்னும் பல தாக்குதல்கள் வரவிருக்கின்றன!. காலம் கடப்பதற்குள் ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.