உலகம்

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் 174 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவானது

பிஜி தீவில் நள்ளிரவு 1.32 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 174 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், நேற்று மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT