உலகம்

எதிர்க்கட்சி ஆதரவுடன் இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகராக மதான் கஹானா தேர்வு

நெதன்யாகு அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய கொள்கைகளில் சிலவற்றை ரத்து செய்யப்போவதாக ஐசென்கோட்டின் தரப்பு அறிவிப்பு.

இஸ்ரேலில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின. அரபு கட்சிகளை 19 இடங்களை வென்றன.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காடி ஐசன்கோட்டுக்கு ஆதரவு இருப்பதால் அவரை கூட்டணி அரசை அமைக்க அதிபர் அழைப்பு விடுத்து உள்ளார்.

இந்த நிலையில் 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடந்தது.

இதில், காடி ஐசன்கோட் கட்சி கூட்டணியின் வேட்பாளரான மதான் கஹானா, யூத மற்றும் அரபு கட்சிகளின் ஆதரவுடன் 66 வாக்குகளை பெற்று வென்றார்.

நெதன்யாகுவின் கட்சி வேட்பாளர் ஓபிர் காட்ஸ், 52 வாக்குகள் பெற்றார். காடி ஐசன்கோட்டின் ஆதரவாளரான கஹானா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, முந்தைய நெதன்யாகு அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய கொள்கைகளில் சிலவற்றை ரத்து செய்யப்போவதாக ஐசென்கோட்டின் தரப்பு அறிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT