லண்டனில் சவுத்தாலில் உள்ள டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்புக்கு அருகிலுள்ள நார்த் ரோட்டில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது.
இதில் 26 வயதான இந்திய வம்சாவளி இளைஞர் குர்பேஜ் சிங் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் காயமடைந்தார்.
இந்நிலையில் காவல்துறையினரும் மருத்துவ உதவியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும் கத்திக்குத்து காயத்தால் பாதிக்கப்பட்ட சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த கொலைச் சந்தேகத்தின் பேரில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் விசாரணை தொடர்வதால் அவர்கள் பின்னர் மீண்டும் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.