உலகம்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் பிரமாண்ட அரங்கம் கட்ட தடை- டிரம்ப் கடும் ஆவேசம்

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியை இடித்துவிட்டு, சுமார் ரூ.3 ஆயிரத்து 700 கோடி செலவில் சுமார் 1000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டத் திட்டமிட்டார்.

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியை இடித்துவிட்டு, சுமார் ரூ.3 ஆயிரத்து 700 கோடி (400 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவில் சுமார் 1000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான கலையரங்கம் கட்டத் திட்டமிட்டார்.

இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கும் அமைப்பு தொடர்ந்த வழக்கில் பெடரல் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் லியோன், "வெள்ளை மாளிகை என்பது நாட்டு மக்களின் சொத்து. ஜனாதிபதி அதன் பாதுகாவலர்தானே தவிர உரிமையாளர் அல்ல" என்று கூறி, நாடாளுமன்ற அனுமதியின்றி கட்டுமானத்தை தொடர இடைக்காலத் தடை விதித்தார். இதனால் ஆத்திரம டைந்த டிரம்ப், "இது தனியார் நிதி மூலம் கட்டப்படுகிறது. இதற்கு அனுமதி தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார். எனினும், பாதுகாப்பு தொடர்பான சுரங்கப்பாதை பணிகளுக்கு கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.