உலகம்

ஜென்சன் ஹுவாங் மறுநியமனத்துக்கு டிரம்ப் தலையீடே காரணம்- என்விடியா நிறுவனம்

ஜென்சனை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை வற்புறுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆலிஸ் என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஜென்சன் ஹுவாங் பதவி விலகினார்.

மீண்டும் நியமனம்

ஜென்சன் ஹுவாங்குக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து அவரை மீண்டும் அதே பதவியில் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், தலைமை அதிகாரி பதவிக்கு திரும்ப விரும்புவதாக ஜென்சன் ஹுவாங் தெரிவித்தார்.

ஆனால் அதை என்விடியா நிறுவன இயக்குனர்கள் குழு நிராகரித்து இருந்தது. இதற்கிடையே திடீர் திருப்பமாக நேற்று ஜென்சன் ஹுவாங்கை அதே பதவியில் நியமிப்பதாக என்விடியா நிறுவன இயக்குனர்கள் குழு அறிவித்தது.

டிரம்ப் தலையீடு

ஜென்சனை மீண்டும் பணியமர்த்த முதலில் திட்டவட்டமாக மறுத்து வந்த என்விடியா நிறுவனம் தனது முடிவை மாற்றியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு மற்றும் அழுத்தமே காரணம் ஆகும்.

இவ்விவகாரத்தில் ஜென்சன் ஹுவாங்குக்காக தனிப்பட்ட முறையில் தலையிட்டார். ஜென்சனை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை வற்புறுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையில் நடந்தது. அவர் ஜென்சன் ஹுவாங்குடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதுடன் என்விடியாவின் நிர்வாகக் குழுவிடம் தனிப்பட்ட முறையில் பேசினார்.

அப்போது ஜென்சன் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதற்கு அரசாங்கம் எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை என்று என்விடியா அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே ஜென்சன் மீண்டும் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது,"நான் என்விடியா நிர்வாகக் குழுவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசினேன். ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்திருப்பது மிகவும் சரியான மற்றும் பொருத்தமான முடிவாகும்.

அவரால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதுவதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் எந்தக் காரணமும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஜென்சனை எனக்குத் தெரியும். அவர் ஒரு சிறந்த தேசபக்தர் மற்றும் தேசத்தின் சொத்து என்று கூறினார்.

SCROLL FOR NEXT