அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் நகரில் 1969-ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி ஜெனிஃபர் லோபஸ் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையில் 1991-இல் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
அதன்பிறகு 1997-இல் வெளியான செலினா என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் தலைமைக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.
அடுத்ததாக 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஆன் தி 6’ என்ற பாப் ஆல்பத்தின் மூலம் தனது இசைப் பயணத்தை அவர் தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து ‘If you had my love, Jenny from the block, On the floor’ உள்ளிட்ட பல உலகளாவிய வெற்றி பாடல்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தைப் ஜெனிஃபர் பெற்றார்.
ஃபேஷன் தயாரிப்புகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சரும பராமரிப்பு பிராண்டான ஜேலோ பியூட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையும் அவர் உருவாக்கினார்.
56 வயதிலும் அவரின் தளராத குணம், இசை, திரைப்படம், ஃபேஷன் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றால் ரசிகர்களுக்கு உந்துசக்தியாக திகழ்ந்து வருகிறார்.
ஜெனிஃபர் லோஸின் மனவுறுதியே அவரின் மிகஉயர்ந்த பலமாக பார்க்கப்படுகிறது.
அவர் விமர்சனங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், எதிர்மறை எண்ணங்கள் தன்னைத் தடுத்து நிறுத்த அனுமதிப்பதற்குப் பதிலாக, அதன் சவால்களை வளர்ச்சிக்கும் சுய முன்னேற்றத்திற்குமான வாய்ப்புகளாகவே அவர் பார்க்கிறார்.