உலகம்

கொட்டாவி விட்டதால் பாதிக்கப்பட்ட இளம்பெண்

ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது. இதனால் என்னால் வாய் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளானேன். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடினேன். பின்னர் எக்ஸ்ரே எடுத்து உரிய சிகிச்சைகளை அளித்தனர். அதன் பிறகு தான் சரியானது என அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT