மரியோ டிராகி 
உலகம்

இத்தாலி பிரதமருக்கு கொரோனா- மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணம் ரத்து

74 வயதான இத்தாலி பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

ரோம்:


இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்கியுள்ளது.  தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருவதுடன், நேற்று அங்கு புதிதாக 52 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த நாட்டின் பிரதமர் மரியோ டிராகிக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 74 வயதான மரியோவுக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று காணப்படுவதாகவும்,  இதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் இத்தாலி அரசு கூறியுள்ளது.   

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, வருகிற 20, 21 தேதிகளில் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல இருந்த இத்தாலி பிரதமரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.