Netanyahu - TRUMP 
உலகம்

அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி இஸ்ரேல்: புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடாக தாங்கள் திகழ்வதை நிரூபித்துள்ளதாக டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைப் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில் "மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அமெரிக்காவின் ஒரு சிறந்த நட்பு நாடாகத் தாங்கள் திகழ்வதை நிரூபித்துள்ளனர்.

அவர்கள் துணிச்சலானவர்கள், தைரியமானவர்கள், விசுவாசமானவர்கள் மற்றும் புத்திசாலிகள். மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய மற்றவர்களைப் போலன்றி, இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது. மேலும், எப்படி வெற்றி பெறுவது என்பதையும் அது நன்கு அறிந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போர் மற்றும் ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்கவும் மற்றும் உதவி வழங்கவும் தயக்கம் காட்டி வந்ததை டிரம்ப் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.