கடந்த மார்ச் முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,057 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,121 ஆக அதிகரித்துள்ளது என லெபனான் சுகாதார அமைச்சகத்தின், அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தெற்கு மற்றும் கிழக்கு லெபனான் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய கடுமையான தாக்குதலில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர், 141 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 47 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 97 பேர் காயமடைந்தனர்.
குறிப்பாக லெபனான் உட்பட பல முனைகளில் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இணைந்து பல நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேளையில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் கடுமையாகி உள்ளது.
லெபனான்மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலால் ஈரான் மீண்டும் ஹார்மூஸ் நீரிணையை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.