கடந்த ஏப்ரல் 17 முதல் இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில் தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மார்ச் 2ம் தேதி முதல் நடந்து வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 2,659 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா குழுக்களின் தளங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடந்து வருகிறது என இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், பலியானவர்களில் பலர் பொதுமக்கள் ஆவர் என தகவல் தெரிவிக்கின்றது.