உலகம்

ஈரானின் எண்ணெய் அமைச்சர் திடீர் ராஜினாமா

தற்காலிக அமைச்சராக அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்பார் என்றும் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரானின் அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் ராஜினாமா செய்துள்ளார் என்றும், அரசுக்கு சொந்தமான தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹமீத் போவர்ட், தற்காலிக அமைச்சராக அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்பார் என்றும் அரசு ஊடகங்கள் தெரிவித்தன; ஆனால், ராஜினாமாவுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆகஸ்ட் 2024 முதல் ஒபெக் உறுப்பு நாட்டின் எண்ணெய் அமைச்சராக இருந்து வந்த மொஹ்சென் பக்னெஜாத், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ஏழு மாத காலப் போர் அந்நாட்டின் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியதால் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

தற்காலிக அமைச்சர் நியமனம்:

"மொஹ்சென் பக்நெஜாத்தின் ராஜினாமாவை நாட்டின் அதிபர் பெசஸ்கியான் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஹமீத் போவார்ட் தற்காலிக எண்ணெய் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்" என ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது ராஜினாமா செய்தி வெளிவருவதற்கு முன்னதாக, "நாங்கள் விற்ற எண்ணெயின் வருவாய் இன்னும் வந்துகொண்டிருக்கிறது, இன்ஷா அல்லாஹ் அது தொடரும்" என்று பக்னேஜாத் கூறியதாக அரசு ஊடகங்கள் மேற்கோள் காட்டின.

டிரம்ப் நம்பிக்கை:

முன்னதாக மத்திய கிழக்கில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், "ஏதேனும் ஒரு வழியில் இந்த போர் மிக விரைவில் முடிவடையும். போர் முடிந்தவுடன் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாகக் குறையும்" என்று தெரிவித்து இருந்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு:

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹார்முஸ் நீரிணஐ கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

SCROLL FOR NEXT