மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்து உள்ளது. இதற்கிடையே அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு உள்ளது.
இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.