இங்கிலாந்து ராணுவம்
உலகம்

ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!

அமெரிக்க விமானங்கள் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டதாக தெரிவித்த ஈரான், முறையாக இலக்காக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஈரான்- அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில் இருதரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

ஈரான் மீது கடந்த 13 நாள் இரவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க ராணுவம் நேற்று நள்ளிரவில் எந்த தாக்குதல்களையும் நடத்திவில்லை. கடந்த 2 வாரங்களில் முதல் முறையாக அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தி உள்ளது.

மத்திய கிழக்கு போரில் அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் உதவக்கூடாது என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இங்கிலாந்துக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு ஈரான் நேரடியாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் இங்கிலாந்தின் விமானத் தளங்களைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஈரானுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்காவை ஆதரித்தால் இங்கிலாந்து நிச்சயமான மற்றும் முறையான இலக்காக கருதப்படும். இது வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பதில்

ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. மேலும், சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது அமெரிக்கா போரை தொடங்கியது. ஆனால் தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என்று ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி, அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று அமெரிக்க உளவுத்துறை கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உளவுத் தகவல்கள் மற்றும் இடைமறிக்கப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியுடன் ஒப்பிடும்போது அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அவரது மகனான மொஜ்தபா கமேனி குறைவான தயக்கமே கொண்டிருப்பதாக அந்த உளவுத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவுக்கும், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே செங்கடல் உடன்கையில் உள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

ஹவுதி- சவுதி அரேபியா இடையே மோதல்

இதற்கிடையே யான்பு வில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடை மறித்ததாக சவுதி அரேபியா தெரிவித்து உள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டு உள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. கப்ர்ட்பெனிட், மிஸ்ரா, பெய்ட் யஹுன், குனின் ஆகிய கிராமங்கள் மீது பிரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. மேலும் மார்க்கபா நகரம் மற்றும் அலி அல்-தாஹெர் மலைப்பகுதிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.