உலகம்

முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்: தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா - வான்வெளியை மூடிய ஈரான்

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரான் வழிக்கு வராவிட்டால், ஈரான் மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா, ஈரான் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அதுமுதல் போர் நடந்து வரும் சூழலில் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் முழுமையான தீர்வை ஈட்டுவதில் இழுபறி நீடிக்கிறது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டலை கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் அதை ஈரான் ஏற்க திட்டவட்டமாக மறுத்துவருவதால் இந்த இழுபறி நீடிக்கிறது.

60 நாள் தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழலில் மீண்டும் முழு அளவிலான தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஈரான் வழிக்கு வராவிட்டால், ஈரான் மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

இன்று நியூஜெர்சியில் இருந்த அதிபர் டிரம்ப் தனது திட்டங்களை ரத்து செய்துவிட்டு அவசரமாக வாஷிங்டனுக்குத் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவின் மிக முக்கிய விடுமுறை தினமான 'நினைவேந்தல் நாள்' கொண்டாட்டங்களை அந்நாட்டின் பல ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது.

ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.