உலகம்

Iran War | துபாயில் உள்ள ஆரக்கிள் அலுவலகத்திற்கு குறிவைத்த ஈரான்

அமெரிக்காவின் எஃகு, அலுமினிய தொழிற்சாலைகளை குறிவைத்து மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தாக்குதல்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் நாட்டின் இரண்டு மிகப்பெரிய எஃகு ஆலைகளை தாக்கியதை தொடர்ந்து, வியாழக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேலை இலக்காக கொண்டு தனது சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது.

"ஈரானிய எஃகுத் தொழிற்சாலைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இன்று காலை புதிய தாக்குதல்களை தொடங்கியது," என்று இராணுவத்தின் மத்திய தலைமையகமான கதம் அல்-அன்பியா, அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள அமெரிக்க எஃகு தொழிற்சாலைகள், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க அலுமினிய தொழிற்சாலைகள் மற்றும் சியோனிச ஆட்சியின் ரஃபேல் ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவை பல இலக்குகளில் அடங்கும் என்று அது கூறியது.

புரட்சிகர பாதுகாப்பு படையின் கடற்படைத் தலைமையகத்தை மேற்கோள் காட்டி, துபாயில் உள்ள "ஆரக்கிள்" மற்றும் பஹ்ரைனில் உள்ள "அமேசான்" ஆகிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களின் தரவு மையங்கள் குறிவைக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.