அமெரிக்கா - ஈரான் இடையே நேற்று முன் தினம் (ஜூன் 19) அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒரு பகுதியாக உலக எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய கடல்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறத்தது.
கடந்த பிப்ரவரி 28 முதல் நடந்து வந்த போருக்கு நீண்ட இழுபறிக்கு பின் தீர்வு காணப்பட்டுள்ள சூழலில் இஸ்ரேலின் நடவடிக்கை நிலைமையை மீண்டும் மோசமாகியுள்ளது.
லெபனானுடன் போர் நிறுத்தம் இருந்தபோதும் இஸ்ரேல் அந்நாடு மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடக்கம் முதல் இதை ஈரான் கண்டித்து வந்தது.
நேற்று அதிகாலை முதல் நடத்தப்பட்ட தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 32க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் தாங்கள் செய்து கொண்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளியான இஸ்ரேலும் திட்டமிட்டு மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தற்போதைய போர்ச் சூழலை ஆய்வு செய்த பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் முழுமையாக மூட முடிவு செய்துள்ளோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை எதிரி தரப்பு மீறிவிட்டது. அவர்களின் இந்த ஆக்கிரமிப்பு மற்றும் பிரகோபனமான நடவடிக்கைகள் தொடர்ந்தால், இதைவிடக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை ஈரான் எடுக்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.