மொஜ்தபா, டிரம்ப் 
உலகம்

லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தாமல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் சாத்தியமில்லை - ஈரான் உச்ச தலைவர்

தெய்வீக வெற்றியை அது கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் போரை முடிக்க லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை நிபந்தனை என உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் மற்றும் அமைப்பின் போராளிகள் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் காமேனி எக்ஸ் பதிவு ஒன்றை மொஜ்தபா வெளியிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு பாராட்டு

அதில், ஹிஸ்புல்லாவின் "பொறுமை, உன்னதம் மற்றும் தியாகத்தை" பாராட்டிய மொஜ்தபா, அவ்வமைப்பை "அசையாத பாறை" என்று வர்ணித்துள்ளார்.

மேலும், "ஜிகாத் மற்றும் எதிர்த்து போரிடுவதை தவிர வேறு பாதை எதுவும் இல்லை" என்று கூறிய காமேனி தொடர்ந்து போராடினால் இறுதியில் தெய்வீக வெற்றியை அது கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.

லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், ஹிஸ்புல்லாவையும் பாதுகாப்பது ஈரானின் பொறுப்பு என்றும் அமெரிக்காவிற்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படுவது கட்டாயம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது பதிவில், தாக்குதலுக்கு உள்ளான தெற்கு லெபனான் மக்களின் பொறுமையையும் ஆதரவையும் பாராட்டி, கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பிற தளபதிகளுக்கு அஞ்சலி செலுத்திதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாவை ஒரு சிறிய நாற்றிலிருந்து ஒரு பெரிய மரமாக போராளிகள் உயர்த்தியுள்ளனர் என்றும் இஸ்லாமிய உலகம் முழுவதும் லெபனானிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என ஹிஸ்புல்லாவினரை மீண்டும் மொஜ்தபா பாராட்டியுள்ளார்.

டிரம்ப் - லெபனான் அதிபர் சந்திப்பு

முன்னதாக ஜூலை 21 அன்று அமெரிக்காவுக்கு சென்று, லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன், அதிபர் டிரம்பை சந்தித்தபோது, லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவது நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அவசியம் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவை ஆயுதங்களை கைவிடச் செய்வதற்கான திட்டங்கள், இஸ்ரேல் வெளியேறுவதை உறுதி செய்தல், லெபனான் ராணுவத்திற்கான அமெரிக்க உதவி, தாக்குதல் சீரமைப்பு பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.