டிரம்ப்  
உலகம்

"என்னைக் கொல்ல ஈரான் சதி.. அதிர்ஷ்டவசமாக உயிரோடு இருக்கிறேன்" - டிரம்ப் புலம்பல்

20-க்கு 1 என்ற விகிதத்தில் தாக்கினோம்.

உடன்பாட்டை மீறி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்களை தாக்கியதால் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்து ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று ஈரானின் 80க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இன்னும் தாக்குதல்கள் தீவிரமடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சதி

இதனிடையே ஈரான் தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டு வருவதாகவும், அவர்களின் ஹிட் லிஸ்டில் தனது பெயர் முதன்மையாக உள்ளதாகவும் டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,

"இதுவரை நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்திருக்கலாம், ஆனால் அது எப்போதும் நீடிக்காது" என கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தை குழுவை சாடிய டிரம்ப், "அவர்களை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

அவர்களுடன் நாம் தேவையில்லாமல் காலத்தை வீணடித்துவிட்டோம். இனி நாம் நம்முடைய அடுத்தகட்ட வேலையைப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

காமேனி இறுதிச்சடங்கு

அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் அதன் மூலம் எந்தவொரு நல்ல முடிவும் கிடைக்கும் எனத் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, தெஹ்ரானில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கொல்லக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இறுதிச்சடங்கு நடந்த மைதானத்தில் டிரம்ப் மற்றும் நேதன்யாகுவுக்கு குறிவைக்கப்படுவதுபோல் சித்தரிக்கப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் தன்னை கொல்ல ஈரான் சதி செய்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

இதனிடையே துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,

"நாங்கள் அவர்களை (ஈரானை) மிக கடுமையாக தாக்கினோம். நாங்கள் அவர்களை 20-க்கு 1 என்ற விகிதத்தில் தாக்கினோம். அவர்கள் எங்களை தாக்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் அவர்களை 20 மடங்கு தாக்குவோம்." என்று கூறினார்.