ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் கிரோசி பேசியதாவது:-
கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, அங்குள்ள ஆயுதத் தயாரிப்புக்கு நெருக்கமான நிலையில் உள்ள யுரேனிய இருப்பின் நிலையை சர்வதேச அணுசக்தி முகமையால் சரிபார்க்க முடியவில்லை.
ஆனாலும் ஈரானில் 2025-ம் ஆண்டு ஜூன் மற்றும் இந்த ஆண்டுகளில் நடந்த ராணுவத் தாக்குதல்களில் சேதமடைந்த எந்தவொரு அணுசக்தி நிலையத்தையும் சீரமைக்கவோ அல்லது மீண்டும் கட்டமைக்கவோ மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கையையும் நாங்கள் கண்டறியவில்லை.
ராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்தவை உள்பட அனைத்து அணுசக்தி நிலையங்களையும் ஆய்வு செய்ய ஆய்வாளர்களுக்கு ஈரான் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.