உலகம்

‘கோட் 100’ என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கிய ஈரான் ராணுவம்: அணுசக்தி நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

அமெரிக்கா ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஏழு மாதங்களாக நீடித்து வருகிறது.

அமெரிக்கா தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களை விடுத்து வரும் சூழலில், ஈரான் அரசாங்கம் ‘கோட் 100’ என்ற அவசர ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஏழு மாதங்களாக நீடித்து வருகிறது.

ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்தி அமெரிக்கா நிபந்தனை விதித்து வருகிறது.

இதையடுத்து நேற்று பஹ்ரெய்னின் ஷேக் ஈசா விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்காவின் ராணுவ ஆளில்லா விமானங்கள் தங்கள் வான்வெளியில் மீண்டும் அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடியாகவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவின் மீது, அமெரிக்கா இன்று தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ‘கோட் 100’ என்ற ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு, எஃப் 14 மற்றும் எஃப் 5 எஸ் போன்ற போர் விமானங்கள் எல்லையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் நடன்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட முக்கிய அணுசக்தி நிலையங்களை சுற்றி வான் பாதுகாப்பு அமைப்பை ராணுவம் பலப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டால், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தளபதிகளுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.

மேலும் ஈரானின் ஏவுகணை தளங்கள், எதிரி நாடுகளின் வான்வழி தாக்குதல்களை தவிர்ப்பதற்காக இரண்டாம் நிலை ஏவுதளங்களுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT