ஆக.7ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானபோது 
உலகம்

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு!

ஆனால் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய சமீபத்தில் வங்கதேசம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘கானே மெல்லட்’அமைப்பின் தலைவர் மெஹ்தி ரஹிமி, இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான அழைப்பு ஈரானுக்குக் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்

சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து இம்மாத தொடக்கத்தில் கையெழுத்திட்ட கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, இதில் உள்ள எந்தவொரு நாட்டின்மீதாவது மற்ற நாடுகள் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அது தங்கள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதி மற்ற இரண்டு நாடுகளும் தாக்குதலில் இறங்கும்.

ஈரான் இந்த அழைப்பைப் பெற்றுள்ளதாகக் கூறினாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சவூதி அரேபியா, பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் இந்த அழைப்பு குறித்து எதனையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தியா கண்காணிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் இந்த புதிய ராணுவக் கூட்டணி போன்ற நகர்வுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஆரம்பத்திலேயே தெரிவித்துள்ளது.