உலகம்

குவைத் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: பாதுகாப்பான இடங்களுக்கு சென்ற மக்கள்

கடந்த 2 நாளுக்கு முன் குவைத் விமான நிலையம்மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒரு இந்தியர் பலியானார்.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக குவைத்-பக்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை குவைத் மீது ஏவுகணை, டிரோன்கள் ஏவப்பட்டன. அவற்றை தடுக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. குவைத் சர்வதேச விமான நிலையம் அருகே பல வெடிச்சத்தங்கள் கேட்டன.

அதேபோல், பஹ்ரைனில் ஏவுகணை, டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன. இதனால் தலைநகர் மனாமா முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கடந்த 2 நாளுக்கு முன் குவைத் விமான நிலையம்மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார். இந்தத் கொடூர தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.