உலகம்

ஆஸ்திரேலியாவின் மத்திய கிழக்கு ராணுவ தலைமையகம் அருகே ஈரான் தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் மத்திய கிழக்கு ராணுவ தலைமையகம் அருகே ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், UAE நாட்டில் உள்ள ஆஸ்திரேலியாவின் மத்திய கிழக்கு ராணுவ தலைமையகம் அருகே ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆண்டனி அல்பானிஸ் கூறியுள்ளார்.