போர் தொடங்கியபோது அமெரிக்கா- இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி (வயது 86) கொல்லப்பட்டார். போர் காரணமாக அவரது உடல் அடக்கம் நடைபெறாமல் இருந்தது.
அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டதால் அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்கு கடந்த வாரம் தொடங்கியது.
தலைநகர் தெக்ரானில் அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமெனியின் உடல் ஊர்வலம் ஈராக்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கர்பலா நகரில் இறுதிச் சடங்கு நடந்தது.
இதையடுத்து இன்று அயதுல்லா அலி கமெனியின் உடல், ஈராக்கில் இருந்து அவரது சொந்த ஊரான ஈரானின் மஷ்ஹத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை கூறியதாவது:-
அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் செய்யப்பட உள்ள மஷ்ஹத் நகருக்குச் செல்லும் பாதைகளில் உள்ள பாலங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கு தல்களை நடத்தி உள்ளது.
கமெனியின் இறுதிச் சடங்கை சீர்குலைக்க அமெ ரிக்கா முயற்சிக்கிறது. 2 பாலங்கள் மீதான தாக்கு தல்களுக்குப் பதிலடியா கவே, பக்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெ ரிக்க ராணுவத் தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்கு தல்கள் நடத்தப்பட்டன.
மீண்டும் அமெரிக்கா தாக்குதலை நடத்தினால் இந்த பிராந்தியம் முழுவதும் உள்ள மேலும் அமெரிக்கத் தளங்களை குறிவைப்போம்.
இவ்வாறு கூறியுள்ளது.