உலகம்

சர்வதேச போர்ச்சூழலுக்கு மத்தியில் இன்று கொண்டாடப்படும் “உலக அமைதி தினம்”

அமைதியில் முதலீடு செய்யுங்கள்: அனைவருக்கும், எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நாளும்” என்ற கருப்பொருளுடன் இன்று உலக அமைதி தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு இடையே போர்ச்சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 21) உலக சர்வதேச அமைதி தினமாக கொண்டாடுகிறது.

சர்வதேச அமைதி தினம் 1981-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபையால் நிறுவப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ஆம் ஆண்டில், பொது சபைகள் ஒருமனதாக வாக்களித்து, அந்த நாளை வன்முறையற்ற மற்றும் போர்நிறுத்தக் காலமாக அறிவித்தது.

கருப்பொருள்

இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாடப்படும் சர்வதேச அமைதி தினம் “அமைதியில் முதலீடு செய்யுங்கள்: அனைவருக்கும், எல்லா இடங்களிலும், ஒவ்வொரு நாளும்” என்ற கருப்பொருளின் கீழ் அமைந்துள்ளது.

இந்த சர்வதேச அமைதி தினமானது, உலகில் உள்ள ஒவ்வொருவரும் அமைதிக்காக தங்களால் இயன்றதை செய்யவும், ஒவ்வொரு நாளும் அமைதிக்காக ஒரு சிறு அடியை எடுத்து வைக்கும்படியும், மேலும் மற்றவர்களுக்கு உதவ தங்களது நேரத்தை ஒதுக்கும்படியும் வலியுறுத்துகிறது.

மேலும் நேர்மறையான மாற்றத்தை முன்னெடுத்து செல்ல பொதுமக்கள் தங்கள் குரலை கொடுக்குமாறும் அறிவுறுத்துகிறது.

உலக மக்கள் சமாதான வட்டத்தை கடைபிடிக்குமாறும் கூறுகிறது.

SCROLL FOR NEXT